Sunday, August 17, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் 250 பேர் கைது-பொலீசாரின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை!

முல்லைத்தீவில் 250 பேர் கைது-பொலீசாரின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில்7 நாட்களில்  போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது !  25 பேர் புனர்வாழ்வுக்கு! இன்று அதிகாலையும்  விசேட சுற்றி வளைப்பு மூவர்கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில்  போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்   25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில்  இன்று (24) அதிகாலையும்  பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர்  இணைந்து  விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்

நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிசாரினால் விசேடமான சுற்றி  வளைப்புகள் பல நடாத்தப்பட்டு பல்வேறு கைது சம்பவங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மீட்கப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்றுவருகிறது

இந்த வகையிலே சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலே பொலிசாரினால் முன்னெடுக்கப்படுகின்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக போதைப்பொருள் தொடர்பான சுற்றி  வளைப்பு நடவடிக்கை ஒன்று இன்று அதிகாலை 4:30 மணியளவில்  முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கள்ளப்பாடு, தீத்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற வாடிகளில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று இன்று(24) காலை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர் அமரதுங்க அவர்களுடைய வழிகாட்டலிலே முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் 1 லசந்த விதாரண  அவர்களது கண்காணிப்பில் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்க அவர்களுடைய நேரடி நெறிப்படுத்தலில்  இன்று அதிகாலை 4:30 மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர்  இணைந்து சென்று  முல்லைத்தீவு கள்ளபாடு  தீர்த்தக்கரை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

குறித்த நடவடிக்கையின் போது போதை பொருட் பாவனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறான பின்னணியில் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 காலை வரையான ஆறு  நாட்களில்  முல்லைத்தீவு மாவட்டத்தில்  முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலி ஓயா, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல், கொக்குளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு  விசேடமாக   மேற்கொள்ளப்பட்ட சுற்றி  வளைப்புகளின் போது 3 கிராம் கெரோயின்  480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லிக்கிராம்  கேரள கஞ்சா கஞ்சா  செடி 5  மற்றும்   48 கிராம் வேறு வகையான போதை பொருட்கள் 443 லீற்றர் கசிப்பு  1797 லீற்றர்  கோடா உள்ளிட்டவைகளும்  கைப்பற்றப்பட்டுள்ள  அதே வேளையிலே இரண்டு பெண்களும் 111ஆண்களுமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 25 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலி நிலைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments