டிப்பரில் பாலைமரக்குற்றிகள் கடத்தல் வாகனமும் சாரதியும் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டிப்பர் ஒன்றுக்குள் சூழ்ச்சிமமான முறையில் அறுக்கப்பட்ட பாலைமரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனமும்அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

23.12.23 இன்று காலை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து டிப்பர் ஒன்றில் சூழ்சிமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே.கேரத் தலைமையிலான பந்துரத்தனாயக்க, ஜெயசூரிய,பிரதீபன் உள்ளிட்ட பொலீஸ் உறுப்பினர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

வள்ளிபுனம் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற குறித்த டிப்பர் வாகனம் தேராவில் பகுதியில் மறித்து சோதனை செய்தவேளை டிப்பருக்குள் பாலைமரக்குற்றிகளை போட்டு அதன்மேல் சல்லிக்கல்லுகளை போட்டு மறைத்து வெளி மாவட்டத்திற்கு கொண்டுசெல்லமுற்பட்ட போது இவை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளன.

சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பாலைமரக்குற்றிகள் துண்டங்களாக அறுக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டவேளை சாரதியினையும் வாகனத்தினையும் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

கல்லாறு தர்மபுரத்தினை சேர்ந்த வானச்சரதியே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் டிப்பர் வாகனம் என்பவற்றையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you