Wednesday, May 14, 2025
HomeUncategorizedஉதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகரை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு அவரின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது 

ஜேர்மனி நாட்டில் வசிக்கும் சிவகுமார் கோபிகா அவர்களது பிறந்த தினமாகிய நேற்று(19) கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக மாணவிக்கு குறித்த துவிச்சக்கரவண்டி  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த துவிச்சக்கர வண்டியினை முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கனகையா தவராசா உள்ளிட்டவர்களால் நேரில் சென்று மாணவிக்கு குறித்த துவிச்சக்கரவண்டி  வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

மேலும் கனடா றொறன்டோவை சேர்ந்த திரு திருமதி ஜுவானந்தன் கலாயினி தம்பதியினரால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு வானவில் மகளிர் அமைப்புக்கு சுழற்ச்சி முறை கடன்திட்டத்துக்கென ரூபா  ஐம்பதாயிரம் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு வானவில் மகளிர் குழுவானது மகளிர் கிராம மகளிருக்கான சுழற்ச்சி முறை கடன்களை வழங்கி வருகிறது 

அந்தவகையில் இவர்களின் சுழற்ச்சிமுறைக் கடன்களுக்காக கனடா றொறன்டோவை சேர்ந்த திரு திருமதி ஜுவானந்தன் கலாயினி தம்பதியினரால் நேரில் சென்று இந்த உதவிகள் நேற்று (19) மாலை வழங்கி வைக்கப்பட்டது 

இந்த நிகழ்விலும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கனகையா தவராசா உள்ளிட்டவர் கலந்துகொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments