Monday, May 5, 2025
HomeUncategorized35 மில்லியின் புனரமைக்கப்பட்ட குஞ்சுக்கோடாலி கல்லு குளம் ஆபத்தான நிலையில்!

35 மில்லியின் புனரமைக்கப்பட்ட குஞ்சுக்கோடாலி கல்லு குளம் ஆபத்தான நிலையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைப்பிரிவின் கீழ் உள்ள குஞ்சுக்கோடலிக்கல்லு குளம் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

தற்போது மழைபெய்து கொண்டிருப்பதால் குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதால் குளம் வான்பாய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் குளத்தின் அபிவிருத்தி பணியில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

சியாப் திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த குளம் தொடர்பில் குளத்தின் புனரமைப்பு சரியான கண்காணிப்பு இல்லாத நிலையில் விவசாயிகளால் பலதடவைகள் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுதொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் விவசாயிகள் ஊடகங்களுக்கு தங்கள் நிலையினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது மழைவெள்ளம் அதிகமாக காணப்படுவதால் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

குளத்தின் நீர் திறக்கும் கொண்டு ஒன்றின் ஒரு பகுதி தாள்இறங்கியுள்ளதுடன் புதிதாக போடப்பட்ட குளக்கட்டின் மண்அணைகளும் வெடிப்புடன் காணப்படுகின்றது இதனால் குளத்திற்கு ஆபத்தான நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

35 மில்லியன் ரூபா செலவு செய்து சியாப் திட்டத்தில் புனரமைக்கப்பட்ட இந்த குளமா என்ற கேள்வி குளத்தினை பார்கையில் ஏற்பட்டுள்ளதுடன்.
இதற்கு உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தற்போது காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் யானைக்காவலுக்காக வயலுக்கு செல்கின்றார்கள் இந்த குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலை காணப்படுகின்றது என்றும் இதனால் விவாயிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments