Tuesday, April 29, 2025
HomeUncategorizedதுணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலய

துணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலய

துணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலயம்!முல்லை மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தில் மு.யோகபுரம் மகாவித்தியாலயம்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது. 

அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 55 மாணவர்கள் தேற்றி 48 மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரக் கூடியவகையில் சித்தியடைந்தள்ளனர்.

 9A சித்தியினை , செல்வி புவனநாயகம் கார்விழி, செல்வி சசிகுமார் அட்சயா, செல்வன் தேவசுதன் மகிழவன், செல்வன் கேதீஸ்வரன் வாணுஜன் ஆகிய 04 மாணவர்களும் பெற்றுள்ளதோடு 8A,B சித்தியினை செல்வி ரஞ்சன் பிறைவிழி அவர்களும் 7A 2B சித்தியினை செல்வன் ரஜிந்தன் மலராஜிதன் அவர்களும் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துளார்கள்.

 இவர்களுடன் இணைந்த ஏனைய 42 மாணவர்களும் சிறந்த பெறுமதிமிக்க பெறுபேறுகயைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 இது மடடுமல்லாமல் அண்மையில் பெளியாகிய உயர்தர பரீட்சையில் இப்பாடசாலை மாணவர்கள் மூவர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இவ்வருடம் இதுவரையும் 9 மாணவர்கள் பல்கலைக்கழகம் தொிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments