Friday, May 9, 2025
HomeUncategorizedமுள்ளிவாய்க்கால் மேற்கில் பாரிய கிடங்கினை தோண்டிய பொலீசார்!

முள்ளிவாய்க்கால் மேற்கில் பாரிய கிடங்கினை தோண்டிய பொலீசார்!

இரண்டுநாட்களாக முள்ளிவாய்க்காலில் தோண்டிய பொலீஸ் இறுதியில் ஏமாற்றம்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்களை தேடி பொலீசார் மேற்கொண்ட இரண்டு நாட்களான தோடுதல் முயற்சியில் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதியினை மூடிவிடுமாறு நீதிபதி அறிவித்துள்ளார்.

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பான வழக்கு கடந்த 19-11-23. அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது

முல்லைத்தீவு போலீசின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19-11-23 அன்று வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதி உடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கிராம சேவையாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர் போலீசார் சிறப்பு அதிரடிப்படையினர் தடையவியல் போலீசார்,தொல்லியல் திணைக்களம் இராணுவத்தினர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் கடந்த (23.11.23) காலை 9:00மணிக்கு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கனரக இயந்திரமே தோண்டும் பணிக்காக நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டு கடற்கரை பகுதியில் சுமார் பத்து அடி ஆழம்வரை தோண்டப்பட்ட போதும் குறித்த கனரக இயந்திரத்தினால் மேற்கொண்டு தோண்ட தோண்ட மணல் மண் உள்ளேமூடதொடங்கியுள்ளது.

இந்த நிலையில் முதல்நாள் பணியினை நிறுத்தி நீதிபதியின் அனுமதியுடன் இரண்டாம் நாளான 24.11.23 இன்று மேலும் மற்றும் ஒரு பாரிய கனரக இயந்திரம் கொண்டுவரப்பட்டு காலையில் இருந்து மாலைவரை குறித்த பகுதியில் பாரிய குழி தோண்ட தோண்ட நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளது நீரினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு வெளியேற்றி தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளபோதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் இரண்டாவது நாளாக தோண்டும் பணி நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த மாதமும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கங்களை தேடி பாரியளவில் தோண்டப்பட்டபோதும் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments