வடக்கில் அதிகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு போராட்டம்!

இலங்கையின் வடக்கில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புபோராட்டம் ஒன்று இன்று 29.03.23 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன் வரலாற்றை திரிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது.

இதேபோல் கச்சதீவில் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றது.

இவற்றை கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து வெடியரசன் கோட்டையினை பார்வையிட்டுள்ளதுடன் அங்கு காலை சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணையும் நடத்தியுள்ளார்கள்

இன்றைய போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து மேலதிக பொலிசார் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பதற்றமான நிலையினை ஏற்படுத்தியதுடன், புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar