Saturday, May 10, 2025
HomeUncategorized உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி! 

 உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி! 

முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லயன் வைத்தியர் கிரிஜகலா அவர்களின் நெறிப்படுத்தலில் முல்லைமாவட்டகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட  20  உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி நெறி (முழுநேரம்) கடந்த இரு நாட்களாக மல்லாவி தொழில்நுட்ப கலை கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் பயிற்சி (14.11.2023) இன்று நிறைவடைந்துள்ளது.

அலுவலக முகாமைக்குரிய கணணி பயிற்சியாக இது அமைந்துள்ளது
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதில் வளவாளர்களாக  ஆசிரியர் லயன் சு.சுபநேசன் மு/யோகபுரம் ம.வி. (செயலாளர், தொழில்நுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையம்)ஆசிரியர் திரு பிரசீலன் மு/பாலிநகர் ம.வித்தியாலயம் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

இபபயிற்சி நெறியில்  வெலிஓயா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய், மாங்குளம் ஆகிய  இடங்களில் கடமையாற்றும் 20 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments