சில மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு பணிக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்!

கார்த்திகை மாதம் பிறந்தால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடந்த காலங்களில் வடக்கில் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொள்ளும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கார்த்திகை 27 அன்று மக்கள் நினைவிற்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் இம்முறையும் மக்கள் நினைவிற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் சில மாவீரர் துயிலும் இல்லங்களுக்கான பணிக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

புலம்பெயர்த்த தமிழ்மக்கள் அமைப்புக்களின் நிதிஉதவியிலம் தாயகத்தில் உள்ள நன்கொடையாளர்களின் நிதி உதவியிலும் மாவீரர் நாளுக்கான நிழக்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன சில இடங்களில் நிதி கையாள்வது தனி நபரின் கைகளில் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் 29 இடங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்பட்டாலும் மக்கள் பல்வேறு இடங்களில் மாவீரர் நாளினை நினைவிற்கொள்கின்றார்கள்.

சில இடங்களில் சரியான நிர்வாக கட்டமைப்புடன் சரியான ஒழுங்கு படுத்தல்களுடன் மாவீரர் நாள் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிகளவான இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்,முள்ளியவளை மாவீரர்துயிலும் இல்லம்,தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்,தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்,இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர்துயிலும் இல்லம்,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்,அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்,களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்,மணலாறு மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்து காணப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களாக காணப்பட்டாலும் முல்லைத்தீவு கடற்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் சுடர் ஏற்றி வணகம் செலுத்துவார்கள்.

இந்த நிலையில் பல மாவீரர் துயிலும் இல்லங்களுக்கான செயற்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு நிதிகையாளர் தொடர்பான பல நடவடிக்கைகள் சரியாக வெளிப்படுத்தப்பட்டுவந்தாலும் சில மாவீரர் துயிலும் இல்லங்களுக்கான பணிக்குழுங்கள் இல்லாதநிலையில் சில தனி நபர்களால் நிதிகள் கையாளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைக்கு இலகுவாகவும் நிதி கொடுப்பவர்களுக்கும் உதவி புரிந்தவர்களும் நன்கு தெரிந்து கொள்ள அறிந்துகொள்ளக்கூடிய வகையில் பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டு கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகும்.

Tagged in :

Admin Avatar