Sunday, May 11, 2025
HomeUncategorizedவித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாக எறிகணைகள் மீட்பு!

வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாக எறிகணைகள் மீட்பு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து செல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தினை இன்று (1) சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அப்பகுதியில் காணப்பட்ட செல்கள் ஐந்தினை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த விளையாட்டு மைதானம் துப்பரவு செய்து செப்பனிட நிலத்தினை தோண்டிய போது பாரியளவிலான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் பாதுகாப்பு தரப்பினர் எடுத்து சென்றுள்ளார்கள் போர் நடைபெற்ற காலப்குதியில் குறித்த பகுதியில் இராணுவத்தினர் எறிகணைதளமாக பயன்படுத்தி வந்த நிலையில் வெடிக்காத 122மில்லிமீற்றர் எறிகணைகள் இவை எனவும் இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினருக்கு சொந்தமானவை என்றும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments