Saturday, May 10, 2025
HomeUncategorizedமுள்ளியவளையில் இளம் குடும்பத்தினை காணவில்லை!

முள்ளியவளையில் இளம் குடும்பத்தினை காணவில்லை!

முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு காணாமல் போன இளம் குடும்பத்தின் காணாமல் போன பெண்ணின் தயாரால்  23.10.2023 இன்று முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாராத்தில் வசிக்கும் குறித்த தயார் தனது மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளார் மருமகன் வயது 23 இவர்கள் இருவரும் கடந்த மாதம் முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவாழ்ந்துள்ளார்கள்.

தனது மகள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும் கடந்த 21.10.23 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி சுவிச்ஓப் செய்யப்பட்ட நிலையில் 23.10.23 அன்று மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரின் தொலைபேசிகளும் தொடர்புகொள்ளமுடியாது ஓப் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாகமண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுகின்றது இதனால் சந்தேகம் அடைந்த தாயார் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதுடன் தனது மகளுக்கும் மருமகனுக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் சந்தேகம் கொண்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments