Friday, May 9, 2025
HomeUncategorizedவிவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சரால் தொடங்கிவைப்பு!

விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சரால் தொடங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வின் தொடக்க நிகழ்வு 14.10.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையினை மேற்கொண்டு வெள்ளம்இவறட்சிஇகாட்டுயானை மற்றும் நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது

இழப்பினை சந்தித்த விவசாயிகளுக்கான மதிப்பீட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் இழப்பீட்டு தொகைகள் விவசாய அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கான தொகைகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதனை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 விவசாயிகளுக்கு காசோலைகள் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு 422 விவசாயிகளின் 363 ஏக்கர் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது இதன்போது இழப்பீட்டினை சந்தித்துள்ள ஏனைய விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்குகளில் இழப்பீட்டு காசோலை வைப்பிலடப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments