முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டுயானைகளால் மக்களின் பயன்தரு தென்னைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் யானைகளின் அட்டகாசம்கள் அதிகரித்துள்ளன.
நெற்செய்கை விதைப்பு காலம் தொடங்கியுள்ளதால் கிராமங்களுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்திற்குள் புகுந்துகொண்ட காட்டுயானைகள் மக்களின் பயன்தரு தென்னைமரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
ஒரு பயனாளரின் 40 தென்னைகளை நாசம் செய்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
சுமார் 5 ஆண்டுகள் வளர்ந்து பயன்தரக்கூடிய தென்னை மரங்களே இவ்வாறு அழித்துள்ளது.
இதனை விட அருகில் உள்ள விவசாயிகளின் தென்னங்காணிகளிலும் யானை அட்டகாசம் புரிந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.