முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் முதலாம் கட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் இதுவரை காலமும் மத்திய பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்ததன் பிரகாரம் இரண்டாம் கட்டமாக 90 மில்லியன் நிதியை ஒதுக்கீடு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் அரச திணைக்கள அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.