நாளைமுதல் யாழ்-நாகபட்டினம் கப்பல் சேவை!


நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை 10ஆம் திகதிமுதல் ஆரம்பமாக இருக்கிறது. பயணிகள் சேவையில் ஈடுபட உள்ள கப்பலின் பெயர் செரியபானி.

இந்தக் கப்பலில் 150 பயணிகள் பயணிக்க முடியும். பயண நேரம் 3 மணிநேரம் ஆகும். ஆரம்ப கட்டணமாக இருவழிப்பயணத்துக்கு ரூபா 52,000/- வரை அறவிடப்படலாம் என தெரியவருகிறது. பயணிகள் 50 கிலோ வரையில் எடுத்துச்செல்ல முடியும்.

இப் பயணிகள் படகு சேவையை ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இயக்குகிறது, இலங்கையில் ஆஷா ஏஜன்ஸிஸ் லிமிடெட் நிறுவனம் கையாள்கிறது.

பயணிகளுக்கான முன்பதிவு 7ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.
இதன் வெள்ளோட்டமாக இன்று காங்கேஷன் துறையை வந்தடைந்த குறித்த கப்பல் மாலை நாகப்பட்டினத்தை சென்று அடைந்துள்ளது

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *