முல்லைத்தீவில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று யானை பிரச்சினை!

முல்லைத்தீவில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று யானை பிரச்சினை-அ.உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக யானை பிரச்சினை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

06.10.23 அன்று இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானைவேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பாடசாலைக்கு அமைத்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக யானை தொடர்பான பிரச்சினை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சினையாக யானை பிரச்சினை காணப்படுகின்றது உலகத்தில் முதன் முறையாக செயற்படுத்தும் திட்டம் முல்லைத்தீவுமாவட்டத்திற்கு கிடைத்திருப்பது வரப்பிரசாதம் இதனை கண்டுபிடித்த கலாநிதி விஜயமோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வவுனியா பல்கலைக்கழகம் பலநல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பல விடையங்களை இருந்து எதிர்பாக்கின்றோம் பல்கலைக்கழகம் அறிவை மட்டும் கொடுப்பதல்ல பல திட்டங்களை செயற்படுத்துகின்ற வகையில் பல்கலைக்கழகம் அமையும்  போது மக்களுக்கு சிறந்த பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலை அமைகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி தொடர்பான பல்கலைக்கழகம் உருவாவதற்கான வாய்பு யாழ் பல்கலைகழகமா வவுனியா பல்கலைக்கழகமா என்ற பிரச்சினை இருந்தாலும் அது வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

மனிதவலுக்கள் பணங்கள் செலவு செய்து இந்த யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது மக்கள் இதனை சரியாக பாதுகாக்கவேண்டும் அதன் பொறுப்பினை மக்கள்  எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Tagged in :

Admin Avatar