முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியினை துறந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்னும் பலர் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இன்று 01.10.2023 முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் போராட்டத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தனக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் நடந்து கொண்டிருக்கின்றது இப்படியான நாட்டில் மதத்தால் எங்களை அடக்குகின்றார்கள் சிங்கள மதத்தினை கொண்டுவந்து பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள் மதத்தின் அடிப்படையில் தமிழரை நசுக்கவேண்டாம் என்பதை வலியுறுத்திய அவர்.
எமக்கான நீதியினை சர்வதேசம் தான் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரம் நடைபெற்று வருகின்றது இந்த புதைகுழிகூட மூடி மறைக்கப்படுமோ என்ற அச்சம் பலமக்களுக்குள் தோன்றியுள்ளது நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை என்றால்
நீதிபதி,தொல்பொருள்திணைக்கம்,சட்டவைத்திய அதிகாரிகள் பல திணைக்களங்கள் சேர்ந்து அகழப்படும் இந்த அகழ்வில் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறி எதிர்வரும் 30 ஆம் திகதி அடுத்த அகழ்வு என்று சொல்லப்பட்டுள்ளது அந்த அகழ்விலும் நீதியினை நாங்கள் எதிர்பாக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது என்று முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று 01.10.2023 முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.