கோம்பாவில் இளைஞன் தென்னை மரத்தின் கீழ் உடலமாக மீட்பு!

புதுக்குடியிருப்பில் ஆண்ஒருவரின் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புது க்குடியிருப்புபொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்கனி ஒன்றில் ஆண் ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

16-09-23 இன்று காலை குறித்த உடலம் அடையாளம் காணப்பட்டு மேற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது 

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சேர்ந்த 29 அகவை உடைய இளைஞன் ஒருவர் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் தேதி உறவினர்களால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

 கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 அகவை உடைய குறித்த இளைஞனே காணாமல் போய் உள்ளதாக நேற்றைய தினம் 15-09-23 உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது 

இவ்வாறு காணாமல் போன இளைஞன் இன்று 16-09-23புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தென்னங்கனி ஒன்றிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்

 இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் குறித்த உடலும் இனங்காணப்பட்டுள்ளது

 சம்பவம் தொடர்பில் உடனத்தை மீட்க நடவடிக்கை மற்றும் மேலதிக விசாரணை என்பவர் புது குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you