கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு திடீரென நிறுத்தம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடீவாய்ப்பகுதியில் தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையினர் நீர் இணைப்புகளை அமைப்பதற்காக நிலத்தினை தோண்டும் போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தோண்டு நடவடிக்கை 15ஆம் திகதியான இன்றுடன் தற்காலிகமாக நிறைவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
14ஆம் தேதி ஆன நேற்றைய நாள் வரை 14 மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் புள்ளி விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது .
இதே வேளை இந்த மனித எச்சங்களில் இருந்து போராளிகள் என அடையாளப்படுத்தப்படும் தகட்டிலக்கங்கள் சயனட் குப்பிகள் மற்றும் சீருடைகள் என்பன தடையப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு.
அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல், சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, கிராம சேவையாளர், தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.