விசுவமடுவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!


புகுடியிருப்பு போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் 19.08.2023அன்றைய தினம் இரவு 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நேக்கி பயனித்த மோட்டார் சயிக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியைச் தர்மலிங்கம் நகுலோஸ்வரன் 47 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலை கொண்டு சிகிச்சை பலனின்றி இன்று 20.08.23 உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

கைதுசெய்யப்பட்ட வாகனத்தின் சாரதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 23 திகதி வரை விளக்மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

உயிரிழந்தவரின் உடலம் யாழ்போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *