மானுரிவியில் மின்னல் தாக்குதல் தென்னைமரம் கொட்டில்கள் சேதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10.08.23 இன்று மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது

  ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக வீடுகளில் வாசித்தவர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மானுருவி கிராமத்தில் மின்னல் தாக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

மானுருவி கிராமத்தில் வசிக்கும் நாதன் என்ற விவசாயியின் காணில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளதுடன் மின்னல் தாக்கத்தினால் வீட்டில் உழவியந்திரத்தின் கொட்டகை உடைந்துவீழ்ந்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வீட்டில் பயன்தரு மரங்கள் சில மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tagged in :

Admin Avatar

More for you