Friday, May 2, 2025
HomeUncategorizedகுருந்தூர்மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள தடையல்ல -அரச சட்டத்தரணிஊடாக தொல்லியல் திணைக்களம்!

குருந்தூர்மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள தடையல்ல -அரச சட்டத்தரணிஊடாக தொல்லியல் திணைக்களம்!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பில் முன்னிலையாகிய ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வழக்கு தொடுனர்கள் சார்பான சட்டத்தரணி எஸ்.தனஞ்செயன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த முறை குருந்தூர் மலையில் பொங்கல் உட்சவம் ஒன்றினை ஆதிசிவன் ஜயனார் ஆலயத்தினர் செய்யமுற்பட்ட போது அங்கு தொல்லியல் திணைக்களத்தினாலும் அங்கு வந்த சகோதர மொழிபேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது அது தொடர்பிலான வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடையத்தினை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்

அது தொடர்பில் பதிலளிப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது இன்றைய தினம் தொல்லியல் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக அரச சட்டத்தரணிஊடாக பிரசன்னமாகியிருந்தார்கள்.

அவர்கள் எந்த விதத்திலும் சைவ மக்கள் அங்கே பொங்கல் பொங்கி வழிபடுவதை தடைசெய்யவில்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நடைபெற்றால் அனை அவர்கள் செய்யமுடியும் அதற்கான உரிமை அவர்களிடம் இருக்கின்றது தாங்கள் எந்த விதத்திலும் அதற்கு பாதகமாகவோ தடையாகவே இருக்கமாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த வழக்கு விசாரணையின் போது ஆலய பரிபாலனசபை ஆலய மக்கள் சார்பாகவும் ஊர்மக்கள் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலரும் ஜனாபதி சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சிரேஸ்ட சட்டத்தரணிகள் வழக்கில் தோன்றியிருந்தார்கள்.

இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக இந்த வழக்கானது 31.08.23 திகதிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments