புதுக்குடியிருப்பில் தோங்காய் திருடர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள் 110 தேங்காய்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் தொடச்சியாக தேங்காய் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது இதற்கு காணி உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றார்கள் காணி உரிமையாளர்கள் அவர்களின் தென்னந்தோப்புகளுக்கான சரியான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு காவலாளிகள் இல்லாத நிலையில் அவ்வாறான தென்னந்தோட்டங்களில் தொடர்ச்சியாக தேங்காய்கள் களவாடப்பட்டு வருகின்ற நிலையில் கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில் தேங்காய் திருட்டில் ஈடுபட்டவர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்து பொலீசில் ஒப்படைத்த சம்பமவ் ஒன்று பதிவாகியுள்ளது

புதுக்குடியிருப்பு கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில் தென்ங்காணி ஒன்றில் இருந்து தோங்காயினை உரித்து கடத்தி செல்ல முற்பட்ட போது கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில் உள்ள தென்னங்காணி ஒன்றில் களவாக தேங்காய்களை பொறுக்கி அதில் 110 தேங்காயினை உரித்து பை ஒன்றில் போட்டு கட்டி அதனை களவாக கடத்தி செல்லமுற்பட்ட வேளை கிராம மக்கள் கள்ளரை கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.

21 அகவையுடைய ஆத்திப்பிலவு கைவேலியினை சேர்ந்த இளைஞனும் 19 அகவையுடைய திம்பிலி 2ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் 44 அகவையுடைய குடும்ப பெண்ணும் சேர்ந்து தென்னந்தோப்பில் தேங்காயினை திருடியுள்ளார்கள் இவர்களை பிரதேச மக்கள் பிடித்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.

பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள். இந்த சம்பவம் 23.03.23 அன்று இடம்பெற்றுள்ளது.

Tagged in :

Admin Avatar