முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தமிழ் மீனவர்களின் எந்த அனுமதியும் இல்லாமல் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து மீனவர்களுக்கும் பெரும்பான்மை வெலிஓயா,கஜாபுரம்,பதவியா பகுதியினை சேர்ந்த 29 பெரும்பான்மை மீனவர்கள் தமிழ் மீனவர்களால் பிடிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்.
பொலீசாரின் வேலையினை கையில் எடுத்த தமிழ் மீனவர்களை 18 பேரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 05.08.23 அன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 47 மீனவர்களையும் 06.08.26 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபொது அவர்களை எதிர்வரும் 08.08.23 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வழக்கு விசாரணையும் அன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மன்று அறிவித்துள்ளது.
இதேவேளை பொலீசாரின் பக்கசார்பான நடவடிக்கையினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் கைதினை கண்டித்தும் மீனவ சங்கத்தினர் மற்றும் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மனு கையளித்துள்ளார்கள்