புதுக்குடியிருப்பில் இலங்கை இராணுவத்தினரால் குடும்பம் ஒன்றுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடு!

முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை  5ஆம் வட்டாரம் பகுதியில் 3 மாத குழந்தையுடன் வசித்து வருகின்ற மனோகரன் தியாகராசா என்ற மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தினரால் வீடு கட்டி கொடுக்கப்பட்டு வீட்டு தளபாடங்கள் மற்றும் வீட்டுத் தோட்ட முயற்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்து வழங்கப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்  முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை  5ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வருகின்ற மனோகரன் தியாகராசா என்ற மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் தற்காலிக வீட்டில் மிகவும் சிரமப்பட்டதன் அடிப்படையில் இவர்களுக்கான வீட்டினை கட்டி வழங்குவதற்காக இராணுவத்தினர் முன்வந்து கடந்த 2023.4.10 அன்று  அடிக்கல்லினை  நாட்டினர்

இவ்வாறாக மிக விரைவாக (மூன்று மாத காலப்பகுதியிலே) குறித்த வீட்டினுடைய கட்டுமான பணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வீட்டிற்கு தேவையான தளபாடங்கள் மற்றும் கிணறு மலசல கூட வசதிகளோடு வீட்டிலே வீட்டுத் தோட்ட முயற்சிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து குறித்த குடும்பத்திற்கான வீடு கையளிக்கப்பட்டிருக்கின்றது

இன்றைய தினம்(31)  காலை 10 மணியளவில் குறித்த வீடானது வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை தலைமையாக தளபதி மேஜர்  ஜெனரல் எம்.கே ஜயவர்த்தன, 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர்  ஜெனரல் சேனக  கஸ்தூரமுதலி, 682 வது படைப்பிரிவினுடைய தளபதி கேணல் றொகான்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.ஜெயந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் அ .கடம்பஜோதி குறித்த பகுதியின் கிராம அலுவலர்புதுக்குடியிருப்பு  வணிகர் சங்க தலைவர் த. நவநீதன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டு குறித்த வீட்டினை பயனாளிகளிடம் கையளித்திருந்தனர்

குறித்த வீட்டினை  பயனாளிகளிடம் கையளித்த முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை தலைமையாக தளபதி மேஜர்  ஜெனரல் எம்.கே ஜயவர்த்தன அவர்கள்  மூன்று மாதங்களில் தான் இந்த வீட்டுக்கு வருகை தருவேன் எனவும் அதற்கிடையில் தாங்கள் ஆரம்பித்து தந்திருக்கின்ற இந்த வீட்டு தோட்டத்தை அழகாக விஸ்தரித்து தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்

இதே வேளையிலே குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இராணுவத்தினருக்கு நன்றியை தெரிவித்ததோடு
புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர்  குறித்த வீட்டினை குறித்த குடும்பம் தற்காலிக வீட்டில் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்த போது மிகவும் நேர்த்தியான முறையில் அமைத்து வழங்கி இருக்கின்ற இராணுவத்தினருக்கு நன்றியை தெரிவித்தார்

Tagged in :

Admin Avatar