முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு இன்றைய தினம் ( மாவட்டத்திலேயே முதன்முதலாக) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் டாக்டர் பேரானந்தராஜா,மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ‘- Dr உமாசங்கர், தெல்லிப்பளை பொது வைத்திய நிபுணர் – Dr. நிஷாகன் மற்றும் மல்லாவி வைத்திய அத்தியட்சகர் – Dr. மைத்ரேயி, மல்லாவி பொது வைத்திய நிபுணர் Dr . ருஷாந்தினி மற்றும் மல்லாவி வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்
மல்லாவி வைத்திய சாலை வன்னி பிராந்தியத்திலேயே அதிகஸ்ட பிரதேசங்களான மல்லாவி,
நட்டாங்கண்டல், ஐயங்கன்குளம், கோட்டை கட்டிய குளம் போன்ற கிராமங்கள் உள்ளடங்கலான 47ற்கு மேற்பட்ட கிராமங்களுக்கான ஒரேயொரு ஆதார வைத்தியசாலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதே வேளை குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கடந்த காலங்களில் சுவாசப்பை பிரச்சனை தொடர்பிலான பரிசோதனைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கே சென்று பரிசோதனைகளைமேற்கோள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மாவட்டத்திலேயே முதன்முதலில் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது