முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று 29.07.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத காடழிப்பு போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி மாவட்டத்தையும் எதிர்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமாமகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் பிரதேசச் செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள்,முல்லைத் தீவு உதவி போலீஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இவ்வாறு கலந்துகொண்ட கூட்டத்தில் பொலீசாரால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதும்,அதிகளவான மணல் அகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருப்பதும் மக்கள் கண்ணூடாக காணக்கூடிய விடையமாக காணப்படுகின்றது.

நாள்தோறும் பல கசிப்பு ,கஞ்சா,ஜஸ்,பாவனையால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமையும் காணக்கூடியதாக உள்ளது
சட்ட நடவடிக்கையினை பொலீசார் எடுப்பதாக கூறிக்கொண்டாலும் மூலகாரணமாக இருக்கும் வியாபாரிகளையும்,கடத்தல் கரர்களையும் கைதுசெய்து கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மக்களின் கவலையாக காணப்படுகின்றது.

கசிப்பு வியாபாரியினையோ கஞ்சா வியாபாரியினையோ பாரியளவில் பொலீசார் பிடிப்பதில்லை அதனை பாவிக்கும் அப்பாவி மக்களை பிடித்து வழக்கு போடுவதாக மக்கள் குற்றச்சாட்டு இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோhத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்

Tagged in :

Admin Avatar