ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்!
IWWWRMP திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குள பிரிவின் கீழ் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்கால் புனரமைப்பு வேலைக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்றைய தினம் (13.07.2023) கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்காலில் உள்ள D – 23 வாய்க்காலின் திருத்த வேலை 5 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசன அமைச்சின் திட்ட அமுலாக்கம் மற்றும் ஒழுங்குபடுத்தலிலும் உலகவங்கியின் நிதி பங்களிப்பிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
காலநிலைதாங்கும் பல கட்ட நிரல் அணுகுமுறை திட்டமும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு .அ.உமாமகேஸ்வரன், மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் திரு சுதாகரன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி யாமினி, துணுக்காய் பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், ஏனைய நீர்பாசன பொறியியலாளர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.