முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்கவுள்ள-அ.உமாமகேஸ்வரன்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன் வருகிற ஞாயிற்றுக்கிழமை 09.07.2023 காலை 8.58 – 9 55 சுபவேளையில் பதவி ஏற்கவுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்ப்பட்ட அரச அதிபர் வெற்றிடத்துக்கு இலங்கை நிர்வாக சேவையின் அதிசிறப்பு தரத்தை சேர்ந்த திரு அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனாவிடமிருந்து அரச அதிபர் நியமனத்தினை பெற்றுக்கொண்டார்.இவர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 09.07.2023 காலை 8.58 – 9 55 சுபவேளையில் பதவி ஏற்கவுள்ளார்

இவர் ஆரம்ப கல்வியினை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும் இடைநிலை கல்வியினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்று வர்த்தக பிரிவில் அதி சிறப்பு சித்தி பெற்று உயர்கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தில் தொடர்ந்து முதுநிலை கல்வியினை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

நிர்வாக சேவை :

பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வெருகல் – திருகோணமலை.

பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், குச்சவெளி – திருகோணமலை.

பிரதிப்பணிப்பாளர்,

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் – கொழும்பு.

பணிப்பாளர்,இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் – கொழும்பு.

பிரதிப்பிரதம செயலாளர்,வடமாகாண சபை.

செயலாளர்,கல்வி கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு.வடமாகாணம்.

மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்.முல்லைத்தீவு மாவட்டம்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *