சர்வதேச நிபுணத்துவம் மேற்பார்வை அடிப்படையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எம்.ஏ.சுமந்திரன்!


கொக்குத்தொடுவாயில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள்!
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய்  பகுதியில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள் இதன் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த அகழ்வு நடவடிக்கை குறித்த முறைப்படி செய்ததாக தெரியவில்லை சர்வதேரரீதியில் இது எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்று நியதிகள்  உள்ளன.

அந்த நியதிகள் எதுவும் இங்கு பின்பற்றப்படுவதாக தெரியவில்லை வைத்தியர் இருந்தாலும் கூட சாதாரணமாக ஒரு புதைகுழியில் ஒரு மனித உடலினை தோண்டி எடுத்து செய்கின்ற பரிசோதனைக்கும் பல உடலங்கள் உள்ள மனித புதைகுழியாக இருக்கின்ற ஒருபகுதி தோண்டப்பட்டு எடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு இதனை செய்வதற்காக சர்வதேச நியதிகள் ஏராளமாக இருக்கின்றன.

ஆதனை படிப்படியாக அதனை அணுகி முறையினை ஒழுகி செய்யவேண்டும் இங்கு அப்படியாக செய்யபடுவதாக தெரியவில்லை  நேற்று மன்னார் நீதிமன்றிலும் மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எல்லா விடையங்களிலும் திருப்திகரமான முறையில் இந்த அகழ்வுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை இது இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் இவ்வாறான தகவல்கள் சாட்சியங்கள் வருகின்ற போது அது மிகவும் கவனமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படவேண்டும் அகழ்வுகள்செய்யப்படவேண்டும்.

இவ்வாறு எதேச்சியகரமாக செய்வதும் செய்கின்ற இடங்களில் வைத்தியர்கள் தொழில்செய்கின்றவர்கள் இடம்மாற்றங்கள் செய்யப்படுகின்றன சிலவேளைகளில் நீதவான்கள் இடம்மாற்றங்கள் செய்யப்படுகின்றார்கள்.

ஆகையால் இதில் இருந்து உண்மையினை கண்டறிவதற்கு அரசிற்கு முழுமையான மனதில்லாமல் இருப்பதும் இன்னும் ஒருபடி மேல் சொன்னால் அவற்றை மூடி மறைப்பதும்தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

இந்த இடத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற சான்று பொருடகள்கூட கவனமாகபேணி பாதுகாக்கப்படவில்லை. இந்த இடத்தினை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்விக்குறியும் இருக்கின்றது.

நேரம் கடந்து செல்கின்றது பொலீசாரின் கையில் இதனை விடப்போகின்றார்களா  வேலியே பயிரை மேய்ந்துவிடக்கூடாது புலனாய்வாளர்கள் ஏராளமானவர்கள் இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளார்கள்.

புலனாய்வாளர்கள் இங்கு வந்து யார் என்ன செய்கின்றார்கள் என்ற தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடையத்தினை மறைக்க நினைப்பவர்கள் அடுத்த நடவடிக்கைக்கு  தயாராகின்றார்கள். ஆகையால் இது சரியான விதத்தில் பாதுகாக்கப்படவேண்டும் சரியான முறையில் சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் மேற்பார்வை உடனடியாக கொண்டுவரப்படவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *