Wednesday, April 30, 2025
HomeUncategorizedவெளிநாட்டில் இருந்து கொலை அச்சுறுத்தல் முள்ளியவளையில் சம்பவம்!

வெளிநாட்டில் இருந்து கொலை அச்சுறுத்தல் முள்ளியவளையில் சம்பவம்!

முள்ளியவளையில் வசித்துவரும் பிரகலாதன் என்பவருக்கு பிரான்ஸ் நாட்டில் இருக்கும் குடும்ப பெண் ஒருவர் ஆட்கள் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளியவளையில் வசித்து வரும் பிரகலாதன் என்பவருக்கு கழுத்து வெட்டி கொலை செய்யவுள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குடும் பிரச்சினைகளுக்கு அடியாட்களுக்கு பணம் அனுப்பி வாள்வெட்டு கும்பலை ஏவி விட்டு பகையானவர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் வசித்துவரும் இளைஞனை கொலை செய்யப்போவதாக இவ்வாறு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளமையினால் குறித்த இளைஞன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் பலர் அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வரமுடியாத நிலையில் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளை அடியாட்களை வைத்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சமடைந்த இளைஞன் பொலீஸ் நிலையத்தில் முறை;பாட்டினை பதிவுசெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments