Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: February 2024

35 இலட்சம் செலவில் உடையார் கட்டில் அமைக்கப்பட்ட முதியோர் ஓய்வகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில் முதியோருக்கான முதியோர் ஓய்வகம் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் மாவட்ட செயலம் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தின் சமூகவேகைகள் திணைக்களத்தின் கீழ் உடையார் கட்டு வடக்கு கிராமத்தில் உள்ள முதியவர்களுக்காக 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு…

மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது  பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் போதும் போக்குவரத்து…

முல்லைத்தீவில் வெள்ளம் மூடிய கிராமங்களில் இலவச மருத்துவமுகாம்!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் – முல்லைத்தீவு கிளையின் ஏற்பாட்டில்; கடந்த (04.02.2024) முல்லைத்தீவு  மாவட்;ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னாகணடல் வசந்தபுரம் மற்றும் கெருடமடு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த கிராடமக்கள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளன பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் இந்த மக்களின் கிணறுகள் அனைத்தும்…

பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு கொக்கிளாய் அ.த.க பாடசாலையில்  வெட்டு புள்ளிகளுக்கு மேலாக 162  புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவியினையும் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கின்ற  நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது கனடா நாட்டிலே வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின்  நிதியனுசரனையிலும் மற்றும் கொக்கிளாய் கற்கைநெறி உதவிக்குழு அமைப்பினரது அனுசரணையிலும்  பாடசாலை முதல்வர்…

முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் சிலையடியில் பறந்த கொடிகள்!

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து  சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின்  ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் தேசிய கொடியினை அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிட்டும் இன்றையதினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

த.தே.ம.முன்னணி முல்லையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவ்வார்ப்பாட்டமானது தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி வேண்டும்,…

முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து தமிழ்  மற்றும் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய…

தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என லண்டனில் இருந்துகோரிக்கை!

வேலுப்பிள்ளை மாதவமேஜர் ஆகியநான் எதிர் வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை குழப்புவதற்கு கூறி முல்லைத்தீவு மாவட்டம். புதுக்குடியிருப்பில் உள்ள எனது வீட்டிற்கு 01.02.2024 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று எனது அம்மா மற்றும் சகோதரியிடம் பலகோணங்களில் விசாரணைகள் செய்து மிரட்டியும் உள்ளார்கள். எனது அம்மா இருதய நோயாளி அவரை இவர்கள் இவ்வாறு மிரட்டுவதால் அவர்களது…

சுதந்திரதினத்தன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

லங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய…

புதுக்குடியிருப்பில் ஐஸ்சுடன் கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை இந்த நிலையில் தேராவில்,விசுவமடு மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றன இந்த நிலையில் 02.02.2024 அன்று கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேராவில் பகுதியில் ஐஸ் எனப்படும் அதிக விலைஉடைய…