Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு கொக்கிளாய் அ.த.க பாடசாலையில்  வெட்டு புள்ளிகளுக்கு மேலாக 162  புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவியினையும் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கின்ற  நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது கனடா நாட்டிலே வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின்  நிதியனுசரனையிலும் மற்றும் கொக்கிளாய் கற்கைநெறி உதவிக்குழு அமைப்பினரது அனுசரணையிலும்  பாடசாலை முதல்வர் செந்தூரன் ஐயா அவர்களின் தலைமையில் நேற்றையதினம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  உதவிக்கல்வி பணிப்பாளர் (ஆரம்ப கல்வி) இலக்கிய கலாநிதி தமிழருவி த.சிவகுமாரன் , அப் பாடசாலையின்  முன்னைநாள் ஆசிரியர்கள், மதகுருமார்கள், பொலிஸ் அதிகாரிகள் , ஆசிரியர்கள் ,கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்

சித்தியடைந்த தரம் 5 மாணவிக்கு பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும்  பாதணியும் வழங்கப்பட்டது, ஏனைய தரம் 5 மாணவர்கள் அனைவருக்கும்  கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அனுசரணையில்  பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்  பாதணிகள், அப்பியாச கொப்பிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்கைநெறி உதவிக்குழுவின் அனுசரணையில் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் பரிசில்களும்  வழங்கி வைக்கப்பட்டார்கள்.

அத்துடன் மாணவர்களை பரீட்சைகளில் சித்தியடைய வைத்தமைக்காக கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினரால்  நினைவுச்சின்னங்கள்  வழங்கி கௌரவமளிக்கப்பட்டார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *