Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனை இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கு தயார்!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் பேச்சுவதற்கு  தயார் என தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்ததாக  இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்களில்  ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இலங்கை இந்தியா மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு நாட்டு அரசின் பேச்சுக்கள் தொடர்பில் முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

நேற்று என்னுடன் தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தொலைபேசியில் பேசி இருந்தார் இந்தபிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார்.

நேற்று மாலை அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும். எனக்கு சொல்லப்பட்டது.

அதேநேரத்தில் என்னையும் அந்த கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்நு கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் அதற்கு இணங்கியுள்ளேன்.

 எனக்கு அவர்கள் உத்தரவாதம் தரவேண்டும்  அவர்களின் இழுவைமடி படகுகள் எங்கள் கடலுக்குள் வந்து வளங்களை சுறண்டுகின்ற,அழிக்கின்ற ,எங்கள் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற  செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதத்தினை தருவார்களாக இருந்தால்  நான் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றேன் இது தான் பேச்சுக்கான அடிப்படை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *