Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

1983 -சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலே முதலில் வந்து இறங்கியிருந்தேன்!

புலிபாய்ந்தகல் பகுதியை சுற்றாலாத்துறையாக்கும் திட்டம் இல்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் கடற்தொழிலோடு சேர்ந்ததாக தான் இருக்குமே ஒழிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இடம்கொடுக்க போவதில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புலிபாய்ந்தகல் பகுதிக்கு இன்றையதினம் (28.02.2024) காலை கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலே முதலில் வந்து இறங்கியிருந்தேன். அதன் பின் இன்று தான் இவ்விடத்திற்கு வந்திருக்கின்றேன்.

இப்பகுதி மீனவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக என்னிடம் முறையிட்டிருந்தார்கள். அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால் நேரில் சென்று பார்வையிடுவதுண்டு. சில நாட்கள் கடந்திருந்தாலும் இவ்விடத்திற்கு இன்று வந்திருக்கின்றேன்.

இவ் மாவட்டத்திற்கு ஆற்றல் மிகு பணிப்பாளர் ஒருவரை நியமித்திருக்கின்றேன். எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடம்கொடுக்க கூடாதென பணிப்புரையை எழுத்தில் அனுப்புமாறு கூறியிருக்கின்றேன்.

அத்தோடு காணி உரிமம் தொடர்பாகவும் கதைத்திருந்தார்கள். எழுத்து மூலம் அதனை கேட்டிருக்கின்றேன் அது கிடைத்த பின்பு அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *