Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மனித யானை மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது –கலாநிதி விஜயமோகன்!  

   யானை வேலி அமைத்தாலும் மனித யானை மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது –கலாநிதி விஜயமோகன்!  

இலங்கையில் 4500 கிலோமீற்றர் யானை வேலி காணப்படுகின்றது இலங்கையில் பல இடங்களில் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் மக்கள் அதனை பராமரிப்பதில்லை அரசாங்கத்தின் சொத்து அரசாங்கம் செய்தது ஆகவே அரசாங்கம்தான் பார்க்கவேண்டும் என நினைத்து சரியாக கவனிப்பதில்லை என வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகன் அவர்களின் உருவாக்கத்தில் இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானை வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை சுற்றி அமைக்கப்பட்டடு கையளிக்கும் நிகழ்வு 06.10.23 அன்று நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வனவிலங்கு சம்மந்தமான கலாநிதி பட்டப்படிப்பினை முடித்துக்கொண்ட கலாநிதி விஜயமோகன இலங்கையில் வனவிலங்கு சம்மந்தமான துறையில் ஆர்வம் கொண்டு ஆராச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த யானை வேலி அமைப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

இலங்கையில் யானை மனித மோதல் என்பது பலகாலமாக இருக்கும் பாரிய பிரச்சினை அரசாங்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

யானை புத்தி கூர்மையான விலங்கு அமைக்கப்படும் வேலிகளை இலகுவாக உடைப்பதால் புதுவிதமான வேலியினை அமைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது வேலியின் அமைப்பினை மாற்றி அமைத்து செய்தால் யானை மனித மோதலை தவிர்கலாம் என்ற அமைப்பில் தொங்கு வேலி என்ற வடிவமைப்பினை 2016 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் எல் வடிவ தொங்கு வேலி வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தங்களுக்கும் இதனை அமைத்து தருமாறு கேட்டதற்கு இணங்க அமைத்து அங்கு சென்று கொடுத்தோன் இந்தியாவின் அசாம்,கருநாடாக,தமிழ்நாடு.கேரளா மாநிலங்களில் 2000 ஆயிரம் கிலோமீற்றர் வரை தொங்கு வேலியினை அமைத்துள்ளார்கள்.

இந்த தொங்கு வேலியில் மாற்றம் பெற்று i வடிவ தொங்கு வேலியினை நான் புதிதாக  வடிவமைத்துள்ளோன் இது முதன் முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேலி யானைகளுக்கு மட்டுமான வேலி மற்றைய விலங்குகளுக்கான வேலி அல்ல.. மக்களுக்கு அது தடுப்பாக அமையாது வளக்கமாக வனவிலங்கு இலாகாவினால் போடப்படும் குறுக்கு வேலி விலங்குகள் மக்கள் அனைவருக்கும் ஆனது.

குறுக்கு வேலி அதிக செலவில் அமைக்கப்பட்டது தொங்கு வேலி அப்படியல்ல செலவு குறைவுயானை புத்தி கூர்மையுடையது இந்த வடிவமைப்பினையும் யானை உடைக்குமாக இருந்தால் இதற்கு அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் ஆராய்வோம் இலங்கையில் பல இடங்களில் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் மக்கள் அதனை பராமரிப்பதில்லை அரசாங்கத்தின் சொத்து அரசாங்கம் செய்தது ஆகவே அரசாங்கம்தான் பார்க்கவேண்டும் என நினைத்து சரியாக கவனிப்பதில்லை இலங்கையில் 4500 கிலோமீற்றர் யானை வேலி காணப்படுகின்றது

ஆனாலும் மனித யானை முரண்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. மக்களின் பங்களிப்பு ஒத்துளைப்பு இல்லாமல் எதுவும் செய்யமுடியாது இந்த தொங்கு வேலி பராமரிப்பு மிகவும் குறைவு இதனை இந்த கிராம மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் இது தொடர்பில் எங்கள் கண்காணிப்பு தொடர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *