Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

அரிசி விலையினை குறைக்க கோரி முல்லைத்தீவிர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசே அரிசி விலையை உடனடியாக 100 ரூபாய் விற்கு கொண்டு வருக- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டுவலியுறுத்தல்

இலங்கை அரசு மக்களின் சோற்றில் கை வைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாயின் கீழ் குறைத்து மக்களின் பட்டினி சாவை தவிர்த்து பொருளாதார சுமையை உடனடியாக குறைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர்  வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய தினம் (09.04.2024) வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் அரிசி விலையை குறைக்க கோரி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் இப்போராட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை பகுதியிலும் இன்று நடைபெற்றது

தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் மத்தியில் பாரிய உணவு தட்டுப்பாடு மற்றும் போசனைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

 ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உணவு அரிசி சோறு ஆகும் அரிசியின் விலை அதிகரித்ததன் காரணமாக பல மக்கள் மூன்று வேளை உணவு உண்பதற்கு பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள் எனவும் நமது மக்கள் ஒருவேளை உணவு இரண்டு வழி உணவையே இருப்பதாகவும் பாடசாலை மாணவர்கள் பாடசாலையில் மயங்கி விழுவதாகவும் ஆகையினால் அரிசி விலையை 100 ரூபாக்கு கீழ் குறைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *