Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

உடையார்கட்டில் வீசிய புயல்காற்று வீடுகள்பல சேதம் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு,குரவில்,மூங்கிலாறு பிரதேசங்களில் நேற்று 21.04.23 மாலை வேளை வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன் நீண்ட நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. கடும் காற்று காரணமாக குரவில் பகுதிக்கு செல்லும் வீதியில் மரங்கள் முறிந்து வீழ்நதுள்ளதால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உடையார் கட்டு தெற்கு கிராமஅவுலகர் பிரிவில் 4…

முல்லைத்தீவில் OMPஅலுவலகம்-மிரட்டி விசாரணக்கு அழைப்பு!

நாங்கள் அறிவித்து வரவில்லை என்றால்  சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி ஓ எ ம் பி யினால் மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு மூன்று தடைவ அறிவித்தும் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை நான்காவது தடவை அறிவித்தும்  வரவில்லை என்றால்  நாங்கள்    சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி ஓ எ ம் பி…

புதுக்குடியிருப்பில் படையிரின் விளையாட்டு போட்டி-விபத்தில் மூவர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பரந்தன் வீதியில் பிரதேச சபை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் உந்துருளியில் பணித்த ஒரோ குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் 22.01.23 இன்று காலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பிரதேசபை பொதுவிளையாட்டு மைதானத்தில் படையிரின் ஏற்பாட்டில் நடைபெற்று சித்திரைப்புத்தாண்டுவிளையாட்டு போட்டியின் போது வீதி போக்குவரத்தில்…

ஒட்டுசுட்டானில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன!

நேற்று 20.04.23 மாலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு கிராம அலுவலகர் பிரிவில் ஜீவநகர் மாதிரிகிராமத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடும் காற்றும் மழையும் பெய்துள்ள நிலையில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த 7 சீற்கள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் வீடு சேதமடைந்துள்ளது. குறித்த பகுதியில் வசித்துவரும் மனோகரன் பகீரதன் என்பவரின்…

முல்லைத்தீவில் 12 ஏக்கர் காணியினை விட மறுக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!

முல்லைத்தீவு உடையார் கட்டு தொற்கு கிராமத்தில் உள்ள நான்கு விவசாயிகளின் 12 ஏக்கர் காணி பிரதேச செயலாளரினால்  உரிமையாளர்களிடம் கையளிக்க சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் வழங்கியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என காணியின் உரிமையார்கள் தெரிவித்துள்ளார்கள். ஊடையார் கட்டு தெற்கு கிராமத்தில் குளத்தின் கீழ் பகுதியில் உள்ள 12 ஏக்கர் காணி நான்கு விவசாயிகளுக்கு…

கிளிபாதரின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -வவுனிக்குளத்தில்!

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட  கிளிபாதர் அவர்களின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும்  அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்;றியத்தினால பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபிரனை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 20.04.23 வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில்முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பதாதையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை…

வன்முறைகள் பரிசளித்த மக்களின் வாழ்க்கை கதையுடன்-சண்முகம் தவசீலன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்துவரும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நீண்டகாலமாக ஊடகவியலாளராக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊடக பணியினை மேற்கொண்டு வருகின்றார் இவரின் ஊடக பணியின் வெளிப்பாடாக இந்த ஆய்வு வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களின் ஒவ்வொரு செய்தி அறிக்கை ஆய்வு அறிக்கைகளின் பின்னால் நீண்ட கதைகள் வரலாறுகள் உள்ளன அந்தவகையில்தான் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட…

வுவனிக்குளத்தில் நீர் இல்லை 204 ஏக்கர் நெற்செய்கைக்கு மாத்திரம் அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் இரண்டு நீர்பாசன திணைக்களங்களில் ஒன்று வவுனிக்குள நீர்பாசன திணைக்களம் வவுனிக்குள நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களுக்குமான போதிய நீர்;வரத்து இல்லாத நிலை காணப்படுகின்றது. முத்தையன் கட்டு நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களுக்கு போதிய நீர்வரத்து காணப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள் தற்போது சிறுபோக…

முல்லைத்தீவில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து சட்டவிரோத படகுகள் கைது!

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை 4 படகுகள் 8 மீனவர்கள் கைது! 19.04.23 முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையான கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நாயாற்று கடற்பரப்பில் வைத்து 4 படகுகளுடன் 8 மீனவர்களை கடற்தொழில்நீரியல் வளத்திணைக்களம் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த…