Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Admin

கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று 06.05.2024 அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடைபரவி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று பாக்குத்தெண்டல் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய வரலாற்று தொன்மைமிக்க தெய்வமான…

முல்லைத்தீவு வெலிஓயா விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்த அமைச்சர்!

ஹலம்பவெவ  விவசாயியின் நான்கு நாள்  உண்ணாவிரதம் அமைச்சர் மனுஷவின் தலையீட்டினால்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டது . முல்லைத்தீவு வெலிஓயா ஹலெம்பவெவ விவசாயிகள் அமைப்பின் தலைவர் தண்ணீர் பிரச்சினை காரணமாக  முன்னெடுத்து வந்த நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்  தலையீட்டினால்  முடிவுக்கு  கொண்டுவர  அவ் அமைப்பு  கடந்த  (04…

முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உடலம் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளிவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து உடலம் ஒன்று இன்று 04.05.2024 மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் உடலம் காணப்படுவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று இரவு குறித்த பகுதிக்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள். தண்ணீரூற்று கிழக்கு…

முல்லைத்தீவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் தலைமையில் பல திட்டங்கள் முன்னெடுப்பு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல பிரதிபலன்களை வழங்கும் வகையில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டம் வேலைத்திட்டம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று 03.05.24 காலை புதுக்குடியிருப்பில் ஆரம்பமானது. அத்துடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள்,…

அளம்பில் காணி சுவீகரிக்க முயற்சி  தடுத்து நிறுத்தம்!

முல்லைத்தீவு மாவடடத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின்  சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு   சுவீகரித்து வழங்க எடுத்த நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02.05.2024) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் ,கரைதுறைப்பற்று பிரதேச செயலக…

மல்லாவியில் இடிமின்னல் தாக்கி ஒருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம்!

மல்லாவியில் இடிமின்னல் தாக்கி ஒருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம் முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மேலே இடி விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் சம்பவத்தில் ஜயங்கன்குளம்…

விசுவமடுவில் இருந்து பேருந்தில் யாழிற்கு கசிப்பு கடத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்க அரச பேருந்தில் 45 லீற்றர் கசிப்பினை சூட்சிமமான முறையில் கடத்தமுற்பட்ட வேளை தர்மபுரம் பொலீசார் இந்த நடவடிக்கையினை முறியடித்துள்ளார்கள். விசுவமடு பகுதியில் இருந்து அரச பேருந்தை மறித்து ஏறிய இருவர் யாழ்ப்பாணம் செல்வதற்கு சிட்டை எடுத்துள்ளார்கள் அவர்களின் பயணப்பொதியும் இதன்போது பேருந்தில் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பயணப்பொதியில் 45…

நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு!

முல்லைதீவு நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு! முல்லைத்தீவு நாயாரறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இன்று 28-04-24 மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள் இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில்…

முல்லைத்தீவில் இராணுவத்தின் தேவைக்காக காணிசுவீகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின்தேவைக்கா கணீசுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் எதிர்வரும் 02.05.2024 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள அளம்பில் தெற்கு கிராமத்தில் உள்ள இலங்கை இராணுவத்தின் 24 ஆவது சிங்க றெஜிமன்ட் அமைந்திருக்கும் 2.0234 ஹெக்டயர் அளவு கொண்ட காணி 24 ஆவது சிங்கறெஜிமன் படைத்தலைமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு…

புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு முச்சக்கரவண்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு முச்சக்கர வண்டியினை வாழ்வாதாரமாக வழங்கிவைத்துள்ளார்கள். தாய்த்தமிழ்பேரவையின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் செரீனா. தவேந்திரம் அவர்களின் நிதி அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவர் மாற்றுத்திறனாளியான நிலையில் அவரது மனைவி ஒரு காலை இழந்த நிலையிலும் உள்ள குடும்பம் ஒன்றிற்காக…