முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கில் உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் இயற்கை உரதொழில்சாலை இன்று 07.06.23 திறந்துவைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்க தலைவர் சே.யோகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கமலேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக வடமகாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும்,கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான தேவந்தினி பாபு,புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் உல தொழிலாளர் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்,கூட்டுறவு அபிவிருத்தி வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர்,கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இயற்கை உர தொழில்சாலையின் பெயர் பலகையினை பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்,கௌரவ விருந்தினர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தொழில்சாலையின் கட்டத்தினை நாடாவெட்டி திறந்துவைத்துள்ளார்கள்.
இதன்போது இயற்கை உரம் எவ்வாறு தயாரித்தல் என்பது தொடர்பில் விருந்தினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் பொதிசெய்யப்பட்ட இயற்கை உரம் சம்பிரதாயபூர்வமாக அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வைக்கப்பட்டு விருந்தினர்களினால் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.