முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் வழக்குகளின் போது அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 27.12.2025 அன்று காலை 9.30 ஏல விற்பனை இடம்பெறும்
ஏலத்தில் காட்சிப்படுத்தபடும் மோட்டார் சைக்கிள், வாகனங்களை அன்றைய தினம் 8.30. தொடக்கம் 9.15 பார்வையிட முடியும்
ஏலத்தில் பங்கேற்பவர்கள் தங்களை உறுதிப்படுத்த அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமான தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு இவற்றுள் எதையேனும் ஒன்றுடன் சமூகமளிப்பது கட்டாயமாது.
ஏலத்தில் எடுத்த பொருளுக்கான பணத்தினை உடனே செலுத்த வேண்டும் காசேலைகள் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது.
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும், வாகனங்கள் 2 தினங்களுக்குள் அகற்றப்பட வேண்டும் (27,29 ஆகிய தினங்கள் மாத்திரம்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
