முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடு;ம்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் சாகர் பந்து நடவடிக்கை திட்டத்தில் ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களுக் உலர் உணவு பொதிகள் யாழில் உள்ள இந்திய தூதரக அதிகாரியால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
20.12.2025 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்க சமாச கட்டத்தில் வைத்து முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரி சாய்முரளி அவர்கள்
இந்த டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பல்வேறு பிரதேச மக்களுக்கு சில உதவிகள் ஒப்பிரேசன் சகர்பந்து என்ற நடவடிக்கையில் வழங்கி வருகின்றோம் இலங்கை நாட்டிற்கு கப்பல்,விமானங்கள் ஊடாக 1200 தொன்னிற்கும் மேலான உதவி நிவாரணபொருட்கள் இந்திய மக்களின் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும்.அரசாங்கத்தின் சார்பாகவும் வந்துள்ளது.
பரந்தன் ஏ35 வீதியில் பாலம் ஒன்று இந்தியா இராணுவத்தினரால் கட்டி அமைத்து மிகவிரைவில் மக்களுக்கு வழங்கப்படப்போகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் இ.தணிகாசலம்
சமாசத்திற்கு கீழ் 33 கிளைச்சங்கங்கள் இருக்கின்றன அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் கடற்தொழிலாளர்களின் படகுகள்,இயந்திரங்கள் வலைகள் அழிவடைந்துள்ளன.
இந்திய தூதரகத்தினால் 150 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது எமக்கு மேலும் தேவையாக உள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் 3500 வரையான மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றார்கள் வழங்கப்பட்ட இந்த பொதிகளை 33 சங்கங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் இந்திய தூதுவரிடம் மேலும் பொதிகளை தந்துதவ சொல்லி அதனை அவர் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்
இந்த புயல் தாக்கத்தினால் அரசாங்கம் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவித்த நிலையில் பல நாட்களாக தொழில்கள் அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் காணப்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்பரேசன் சாகர் பந்து இலங்கையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் யாழ் துணைத்தூதுவர் சாய்முரளி!
இலங்கையில் டித்வாபுயல் தாக்கத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்திய அரசின் ஒப்பரேசன் சகர் பந்து நடவடிக்கை மூலம் பல்வேறு உதவிகளை கொண்டுவருவோம் என்று யாழில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சாய்முரளி தெரிவித்துள்ளார்.



