Friday, December 12, 2025
HomeMULLAITIVUமுத்தையன் கட்டுக்குளம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தல்!

முத்தையன் கட்டுக்குளம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.
முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இதனை சீர்செய்யும் நடவடிக்கையில் படையினர் மக்கள் பொதுமக்கள் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இந்த நிலையில் முத்தையன்கட்டு குளத்தின் வான்பாயும் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதை பல யூடியூப் காரர்கள் எடுத்து காணொளியினை பதிவேற்றியுள்ளார்கள்.

இதன்போது ஒரு யூடிப்பர் போட்ட பதிவினை இங்கு தருகின்றோம்.
(சூறாவளியின் வெளிப்பட்ட மன்னர் காலப் பொக்கிஷங்கள்
​முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள முத்தையன்கட்டு குளம், அண்மைக்காலமாக இலங்கையில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய வானிலையால் பாரிய சேதங்களுக்குள்ளானது. இந்தச் சேதங்கள் ஒரு நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட இழப்பாக மட்டும் அமையாமல், மன்னர் காலத்து (முத்தரையர்-சோழர் காலம்) பண்டைய வரலாற்றுக் கட்டமைப்புகளை மீண்டும் வெளிக்கொண்டுவரும் அரியதொரு வாய்ப்பாக மாறியுள்ளது.


​சேதத்தில் வெளிப்பட்ட அதிசயப் பொக்கிஷம்
​பழைய கட்டுமானங்கள் குளத்தின் கீழ் கட்டுமானப் பகுதிகள் சேதமடைந்ததால், பழங்காலக் கட்டிட அமைப்புகளின் எச்சங்கள் தற்போது நிலமட்டத்திற்கு மேலே தெளிவாகக் காட்சியளிக்கின்றன. இது, குளத்தின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியிருந்த நாகரிகம் குறித்த புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியுள்ளது.
​புதையல் எச்சங்கள்: வெளித்தெரியும் இந்தச் சிதைவுகளுக்கு மத்தியில், பண்டைய புதையல் அல்லது தொல்லியல் எச்சங்களைக் காணக்கூடியதாக இருப்பது, அப்பகுதி ஒரு காலத்தில் செழிப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
​வரலாற்று ஆதாரம்: ஆய்வுகளின்படி, முத்தையன்கட்டு குளம் சோழர் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் என்ற இனக் குழுவினரால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சிதைவுகள் அந்த வரலாற்றுத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான கள ஆதாரங்களாக அமைகின்றன.


​முத்தையன்கட்டு குளத்தின் இந்தச் சம்பவம், இயற்கைச் சீற்றங்கள் எவ்வாறு சிலசமயம் மண்ணுக்குள் புதைந்துபோன வரலாற்றுப் புதையல்களை வெளிக்கொணர உதவுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம். இந்தச் சிதைவுகளைப் பாதுகாப்பதும், ஆழமான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதும், இலங்கையின் வடபகுதியின் வரலாற்றில் மறைந்திருக்கும் பக்கங்களைத் திறக்கும் திறவுகோலாக அமையும்)
என்று தனது பக்கத்தில் காணொளிகளை பதிவேற்றம் செய்துள்ளார்.


இவ்வாறு சில யூடிப்பர்கள் காணொளிகள் பதிவேற்றம் செய்துள்ளமை தொல்பொருள் திணைக்களத்தின் பார்வைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற தொல்பொருள்திணைக்கள அதிகாரிகள் அந்த தொல்பொருள் சின்னத்தினை சுற்றி அடையாளப்படுத்தி அதில் விகாரை இருந்தமைக்கான ஆதாராம் இருந்துள்ளதாக தெரிவித்து இதில் எந்த பணியும் மேற்கொள்ளவேண்டாம் அதற்கான உரிய கடிதம் எழுத்துமூலம் வரும் என நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments