எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்வழங்கிவைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மந்துவில் கிராமத்தில் 20 குடும்பங்களுக்கும் ஆனந்தபுரம் கிராமத்தில் 30 குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் றஞ்சினி என்ற உறவின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளரின் பணிப்பிற்கு அமைய கிராமசேவகர் ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது


