இன்று 09.12.2025 காலை தொடக்கம் வவுனியா வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது இன்று இரவு வரை இந்த மழை நீடித்துக்கொண்டிருக்கின்றது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட ஒலுமடு,கீரிசுட்டான்,பட்டிக்குடியிருப்பு,கற்குளம்,மருதோடை ஒதியமலை நைனாமடு,குழவிசுட்டான் பெரியமடு,சன்னாசிபரந்தன்,போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது இதனால் அந்த பிரதேசங்களில் உள்ள சிறு குளங்கள் நிரம்பியுள்ளது
இந்த பிரதேசங்களில் பெய்யும் மழைவெள்ளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு,மற்றும் முத்தையன் கட்டு குளங்களுக்கு ஆறுகள் ஊடாக செல்லிக்னறன.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டுகுளம்,தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் இரண்டு குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தாள்நிலப்பிரதேசங்களில் இருக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அறிவித்துள்ளார்கள்
இன்று காலை 8.00 மணிதொடக்கம் மாலை வரை அளம்பில் அண்டிய பிரதேசத்தில் 134 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது.
வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றிரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவுகிறது.
