முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பதிப்புக்குட்பட்ட மக்களுக்கான தொடர் நிவாரண பணிகளை வழங்கிவரும் துளிர் புதியதொடக்கம் அமைப்பு
யாழ்ப்பாணத்தினை தளமாக கொண்டு இயங்கும் துளில் புதியதொடக்கம் என்ற அமைப்பு வன்னிப்பெருநிலப்பரப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண பொருட்களை வழங்கும் நடவடிக்கையினை கடந்த இரண்டு நாட்காளாக முன்னெடுத்து வருகின்றது.
கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிராமசேவையாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 04.12.2025 அன்று 400 குடும்பங்களுக்கான உலர்உணவு பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் தொடர்ச்சியான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றன.







