Tuesday, November 25, 2025
HomeMULLAITIVUதேவிபுரத்தில் மரம் முறிந்து வீழ்ந்தில் ஆட்டோ சேதம் சாரதி படுகாயம்!

தேவிபுரத்தில் மரம் முறிந்து வீழ்ந்தில் ஆட்டோ சேதம் சாரதி படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முதன்மை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது வீதி ஓரமாக நின்ற மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் 24.11.2025 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட முப்புர வட்டாரத்தில் தேவிபுரம் பிரதான வீதியில் கடும் மழை காரணமாகவும் காற்று காரணமாகவும் வீதி ஓரத்திலே நின்ற மரம் ஒன்று வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முட்சக்கர வண்டி மீது பிரண்டு விழுந்துள்ளது.

விழுந்த மரத்தினை அகற்றுவதில் பிரதேச சபையினர் அசமந்த போக்கு குற்றம் சாட்டும் வட்டார உறுப்பினர் எஸ்.குகநேசன்
உடனடியாக கிராம சபையாளர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் அனைத்து முகாமைத்துவ பிரிவு பிரதேச செயலாளர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது பிரதேச சபையின் உடைய நிர்வாகம் இதனை அகற்றமுடியாத நிலையில் காணப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரை பலதடவைகள் தொடர்புகொண்டும் அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டிய வட்டார உறுப்பினர்.
இந்த நிலையில் வட்டார உறுப்பினர் அவரின் நண்பர்களும் இணைந்து அந்த கிராம சேவையாளர் ஒத்துழைப்போடும் அனர்த்த முகமைத்துவ உதவியாளர்களுடைய ஒத்துழைப்போடும் குறித்த மரம் அகற்றப்பட்டிருந்தது
அதேபோன்று மின்சார சபையும் இரவு 11 மணி வரையும் அந்த வேலை திட்டங்களை முன்னெடுத்து எமக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள் அவர்களுக்கும் நன்றிகள் எமது பிரதேச சபையானது இன்று இவ்வாறான அசமந்த போக்ககா இருப்பது என்பது உண்மையிலேயே கவலைக்குரிய விடயம் என்றும் வட்டார உறுப்பினர் எஸ்.குகநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments