முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிராமத்தில் உள்ள மாவீரர்கள் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு 22.11.2025 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
செம்மலைப்பகுதியில் முல்லைத்தீவு-கொக்கிளாய் வீதியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரர்கள் பெற்றோர்கள் கையில் சுடர் ஏந்தியவாறு அழைத்து வரப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் மாவீரர் வணக்க நிகழ்வும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் மாவீரர்கள் திருவுருவப்படம் வைக்கப்பட்ட பந்தலின் பொதுச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர் ஒருவர் ஏற்றிவைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
மாணவிகளின் நடன நிகழ்வும் மாவீரர் தொடர்பான நினைவு பகிர்வும் இதன்போது இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து மாவீரர் பெற்றோர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கி மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.செம்மலை கிராமத்தினை சேர்ந்த பெருமளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

