22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் மேற்கு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை முன்பாக இருந்து மங்கள வாத்திய இசையுடன் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மாணவர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது
இதன்போது மாணவியின் நடன நிகழ்வு மற்றும் வன்னிமயில் நடனக்கலைஞரின் நடன நிகழ்வு என்பன இடம்பெற்று மாவீரர்களின் வீரம் தியாகம் ,அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரையினை மூத்த முன்னாள் போராளி அன்பரசன் நிகழ்த்தினார்.

