முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் ஒருதொகுதி மாவீரர் பெற்றோர்கள் 22.11.25 அன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பொதுநோக்கு மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மாவீரர்களின் பெற்றோர்கள் செங்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவீரர் நினைவாக நினைவு சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களின் பிள்ளைகளின் நினைவான திருவுருவப்படமும் கையளிக்கப்பட்டுள்ளது
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் போராளியும் மூத்த போராளியுமான அன்பரன் அவர்களும் கிராமத்தின் பங்குத்தந்தை,மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து நினைவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்

